தமிழகத்தில் வீசப்போகும் சூறாவளி காற்று... - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

Tamil nadu Regional Meteorological Centre
By Nandhini Jan 30, 2023 11:32 AM GMT
Report

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இதனையடுத்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய உள்ளது.

சூறாவளி காற்று வீசும் என்பதால் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம். 

இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 01.02.2023 அன்று காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்க உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (30.01.2023) காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை -திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.   

 இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tamilnadu-rain-meteorological-center