தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை...!
Tamil nadu
Regional Meteorological Centre
By Nandhini
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது -
காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வருவதால், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய உள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்யும். மேலும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.