வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு...!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது -
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க உள்ளது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழப்பதால், தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவில் வலுகொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.