அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கனமழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. ராசிபுரத்தில் பெய்த கனமழையால், ஆயிரக் கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், அப்பகுதி விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இந்நிலையில், இன்று கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பம் பகுதியில் மழையால் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.
அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கையில்,
சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.