இதெல்லாம் சும்மா... வரும் 16ம் தேதி மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி? மக்களுக்கு கடும் எச்சரிக்கை

Tamil nadu Regional Meteorological Centre
By Nandhini Nov 12, 2022 11:05 AM GMT
Report

பருவ மழை

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மின்னல், இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

சென்னையில் கனமழை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதால், சென்னையில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நவம்பர் 16ம் தேதி தமிழகத்தில் கனமழை 

இந்நிலையில், இது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் -

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தின் உள்பகுதியில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக்கடலுக்கு செல்ல உள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய உள்ளது.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னையில் நாளுக்கு நாள் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், இலங்கைக் கடலோரப் பகுதியில் உள்ள தாழ்வான சுழற்சி மையத்தைச் சுற்றிலும் மேகங்கள் உருவாகி வருகின்றன.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 16ம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், அதிகளவு கனமழை தமிழகத்தில் பெய்ய உள்ளது.

இதனையடுத்து, சென்னை மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

tamilnadu-rain-meteorological-center