தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வட மாநிலங்களில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் -
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், ராணிப்பேட்டை, தி.மலை, பெரம்பலூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.