சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை உள்பட இந்த 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என்னு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதிலிருந்து கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், மதுரவாயல், அம்பத்தூர், போரூர், செம்பரம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை ஆய்வு மையம்
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.