தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Tamil nadu
By Nandhini
தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.