இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

tamilnadu-rain-meteorological-center
By Nandhini Dec 18, 2021 05:02 AM GMT
Report

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் நேற்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.

இதனால், தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், அவை காலதாமதமாக உருவாகி உள்ளது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

மேலும், தென் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். மேலும், இன்று முதல் 20ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ முதல் மணிக்கு 60 கிமீ வேகம் வரை வீசக்கூடும். இதனால், கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Tamilnadu Rain Meteorological Center