தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சூழ்ச்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டு அறிவிப்பு வருமாறு - வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். 21.2.2021 மற்றும் 22.2.2021 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். இதர பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்பு உள்ளது.
வரும் 23ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும். சென்னை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட வாய்ப்பு உள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.