தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் கூட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையில் தாக்கம் இருந்து கொண்டிருக்கிறது.
சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்தது, இந்நிலையில் அடுத்த 12 மணிநேரத்துக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , விழுப்புரம் , கடலூர் , நாகை , திருவண்ணாமலை , ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நீலகிரி , கடலூர் , நாகை , மயிலாடுதுறை , விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.