நாளை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆராய்ச்சி மையம்
பருவ மழை இறுதி கட்டத்தை எட்டியதையடுத்து, 'டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு - இன்று, தமிழக வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்யும். நாளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
கடலுார், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். வரும், 6, 7ம் தேதிகளில், மாநிலத்தில் பரவலாக சில இடங்களில், மிதமான மழைக்கு பெய்யும். சென்னையில் சில இடங்களில், லேசான மழை பெய்ய உள்ளது.
வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 29 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.