நாளைக்குள் அனைத்து பகுதிக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவிடும் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

tamilnadu-rain-current
By Nandhini Nov 12, 2021 03:28 AM GMT
Report

சென்னையில் 4,000 பணியாளர்கள் தமிழகம் முழுவதும் 36,000 பணியாளர்கள் என இரவு முழுவதும் மின் இணைப்பு பணிகளில் மின்சார வாரிய பணியாளர்கள் ஈடுபட இருக்கிறார்கள். நாளைக்குள் அனைத்து பகுதிக்கும் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது -

வடகிழக்கு பருவ மழையால் சென்னையிலுள்ள 223 துணை மின் நிலையங்களில், 221 துணை மின் நிலையங்கள் செயல்பாட்டில் இருந்தது பருவமழை பாதிப்பால், 2 துணை மின் நிலையங்கள் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இன்று கோடம்பாக்கம் துணை மின் நிலையம் சரிசெய்யப்பட்டு விநியோகத்திற்கு தொடரப்பட்டுள்ளது கொண்டு வரப்பட்டுள்ளது.

துணை மின் நிலையத்தில் மழை நீர் சூழ்ந்திருப்பதால் மழைநீர் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று இரவுக்குள் அது சரி செய்யப்பட்டு நாளை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் இன்று இரவு முழுக்க 4000 மின்சார வாரிய பணியாளர்கள் மின் இணைப்புகளுக்கு உண்டான பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

தமிழகம் முழுக்க 36 ஆயிரம் மின்சார வாரிய பணியாளர்கள் இன்று இரவு முழுவதும் மின் இணைப்பு சரி செய்யும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மின்வினியோகம் நிறுத்தப்பட்ட இடங்களுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் நாளை மாலைக்குள் மின்வினியோகம் மக்களுக்கு தடையின்றி வழங்கப்படும்.

நகரங்களில் பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதுவும் இன்று இரவுக்குள் பணிகளை மேற்கொண்டு சரி செய்யப்படும். 3 நாள் ஆகியும் மின்சாரம் தட்டுப்பாடாக இருக்கிறது. தமிழகம் முழுக்க நேற்று 2700 புகார்கள் வந்துள்ளன. அதில் 900 மேற்பட்ட புகார்கள் நேற்று மாலையே சரி செய்யப்பட்டுள்ளது. 44 லட்சம் மின் இணைப்புகள் சென்னையில் மட்டும் உள்ளது. அதில் 66 மின் இணைப்புகள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டது. அதுவும் இன்று இரவுக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

நாளைக்குள் அனைத்து பகுதிக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவிடும் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் | Tamilnadu Rain Current