தொடங்கிய பருவ மழை .. இனிமே மழைதான் : வானிலை மையம் சொன்ன தகவல் என்ன தெரியுமா ?
By Irumporai
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அக்டோபர் , நவம்பர் , டிசம்பர் ஆகிய மாதங்கள் எப்போதுமே வடகிழக்கு பருவமழை தொடங்கும் நாட்கள் ஆகும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான சித்ராங் புயல் காரணமாக வடகிழக்கு பருவ மழை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதிகரிக்கும் மழை
இந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் பருவ மழை தொடங்கியுள்ளதாக சென்னைன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . மேலும், வருகிற நவம்பர் 1 முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் நவம்பர் 4 பிறகு குறைந்து மீண்டும் மழையானது அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.