4 நாட்களுக்கு கனமழை..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - எங்கெல்லாம்..

Tamil nadu Chennai
By Sumathi Oct 13, 2022 02:29 PM GMT
Report

 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 கனமழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வரும் அக்டோபர் 17-ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

4 நாட்களுக்கு கனமழை..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - எங்கெல்லாம்.. | Tamilnadu Rain Chances In Next Days

இந்த அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 15-ம் தேதி தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில்..

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார்குளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில்

சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிலேயே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும். எனவே மேல் குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.