தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகம் வடகடலோரம் மாவட்டங்களில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் இருந்து ராயலசீமா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகம், வடகடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
27-ந்தேதி தென் தமிழகம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
28, 29-ந்தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனக் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.