தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

By Nandhini May 06, 2022 05:05 AM GMT
Report

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

வங்கக்கடலில் அந்தமான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

இதனால், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் ,திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ,ஈரோடு, கரூர் ,நாமக்கல், சேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்க உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.