கனமழை எதிரொலி - சென்னையில் போக்குவரத்து மாற்றம் - முக்கிய அறிவிப்பு

tamilnadu-rain chennai-flood Traffic change
By Nandhini Nov 27, 2021 03:59 AM GMT
Report

வடகிழக்கு பருவமழையால் சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, போக்கு வரத்து மாற்றம் செய்து நிலவரத்தை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

நீர் தேங்கியுள்ள சாலைகள் மற்றும் மழை நீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்களில், ரங்கராஜபுரம் 2 சக்கர வாகன சுரங்கப் பாதை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.

மேட்லி சுரங்கப்பாதை மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு 2வது அவின்யூ நோக்கி திருப்பி விடப்படுகின்றது.

வளசரவாக்கம் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல கேசவர்த்தினி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டிருக்கிறது.

வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அபிபுல்லா சாலை மற்றும் சாலை வழியாக திருப்பி விடப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகரம் மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள் எதிரே உள்ள அண்ணா சாலையில் வடிகால் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில் உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர்திசையில் அனுமதிக்கப்படுகிறது.

இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டுமே அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்பட்டிருக்கிறது. மேடவாக்கம் சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்கநல்லூர் நோக்கி திருப்பி விடப்பட்டிருக்கிறது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை எதிரொலி - சென்னையில் போக்குவரத்து மாற்றம் - முக்கிய அறிவிப்பு | Tamilnadu Rain