செம்பரம்பாக்கம் ஏரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்ந்தது - மக்களே அலார்ட்
இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழையானது தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகின்றது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழையால் சென்னை நுங்கம்பாக்கம், கோயம்பேடு, கோடம்பாக்கம், போரூர், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய புறநகர் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்திருக்கிறது. இதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.