தமிழகத்தில் இந்த '12 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்'
இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு-
இலங்கை பகுதியில் உள்ள காற்று சுழற்சியானது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வங்க கடல் பரப்பில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வருவதால் , தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 30ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி ,கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும். நாளை சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வருகிற 29ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.