இன்று இந்த 9 மாவட்டங்களில் மிக கனமழை– காற்றின் வேகம் அதிகரிக்கும்

tamilnadu-rain
By Nandhini Nov 26, 2021 08:26 AM GMT
Report

தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -

வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போது இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிக்கு வந்துள்ளதன் காரணமாக நெல்லை,தூத்துக்குடி, கன்னியாக்குமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதனால், குமரி பகுதி, தென் கடலோர தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மற்றும் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட காலத்திற்கு மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். அதன்படி,சென்னை திருவள்ளூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.