அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை - காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும்

tamilnadu-rain
By Nandhini Nov 19, 2021 08:20 AM GMT
Report

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், அடுத்த 6 மணி நேரத்திற்கு தமிழகக் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். குமரி பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை  - காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும் | Tamilnadu Rain