கரையை கடந்தது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம் தகவல்

tamilnadu-rain
By Nandhini Nov 19, 2021 03:17 AM GMT
Report

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 3-4 மணி அளவில் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடந்தது. இது தற்பொழுது வட தமிழகம் மீது நிலைக்கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விடப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்று மதியம் வரை தொடரும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.