காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருக்கிறது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வடதமிழகம் - தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் அதிக கனமழை தொடர உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னையிலிருந்து 310 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 300 கி.மீ தொலைவிலும் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டிருக்கிறது.
இதனால், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல் IBC Tamil