தொடரும் கனமழை - சென்னை உள்பட இந்த 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

tamilnadu-rain
By Nandhini Nov 11, 2021 09:25 AM GMT
Report

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மாலை புயலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தி கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறார்.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். சென்னையில் மழை நீர் முழுவதுமாக வெளியேறாத நிலை உள்ளது. இன்று மாலை புயலுடன் கூடிய கனமழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டிருக்கிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.