சென்னை மக்கள் கவனத்திற்கு... - பாம்பு பிடிப்பவர்கள் எண்களை வெளியிட்டது மாநகராட்சி

tamilnadu-rain
By Nandhini Nov 11, 2021 04:17 AM GMT
Report

சென்னை மாநகராட்சி, பாம்பு பிடிப்பவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருவார காலமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், சில இடங்களில் தேங்கி உள்ள மழை நீர் மற்றும் சகதியான இடங்களுக்குள் பாம்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி, பாம்பு பிடிப்பவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதோ அந்த விவரம் - 

சென்னை மக்கள் கவனத்திற்கு... - பாம்பு பிடிப்பவர்கள் எண்களை வெளியிட்டது மாநகராட்சி | Tamilnadu Rain