சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல் - மக்கள் வெளியே வர வேண்டாம் - கமிஷனர் எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதிகமான கனமழை காரணமாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழை நீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரித்திருக்கிறார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சென்னை நகர் முழுவதும் மழைநீர் தேங்கி இருப்பதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவி செய்வதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மாநகரில் நேற்று மாலை முதல் அதிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 11 சுரங்கப்பாதைகள் மழைநீரில் மூழ்கி இருக்கின்றன. எனவே சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
மூடப்பட்டுள்ள 11 சுரங்கப்பாதைள் -
1. வில்லிவாக்கம்சுரங்கப்பாதை
2. தியாகராயர் பகுதியில் மேட்லி சுரங்கப்பாதை,
3. கோடம்பாக்கம் துரைசாமி சுரங்கப்பாதை
4. கொருக்குப்பேட்டை சுரங்கப்பாதை
5. அஜாக்ஸ் சுரங்கப்பாதை
6.கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை
7.பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
8. தாம்பரம் சுரங்கப்பாதை 9. கணேசபுரம் சுரங்கப்பாதை
10. வியாசர்பாடி சுரங்கப்பாதை
11. அரங்கநாதன் சுரங்கப்பாதை
இந்நிலையில், கனமழை காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.