தொடர் கனமழை - சென்னையில் 36,000 மேல் வீட்டிற்கு மின்விநியோகம் நிறுத்தம் - மின்வாரியம் அறிவிப்பு
இரவு முழுவதும் கனமழை பெய்து வருவதால், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் 36,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து மின்சார வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட அதன் புறநகர்ப் பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது.
இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் 36,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. பெரம்பூர், வியாசர்பாடி, மேற்கு மாம்பலம், தி.நகர், கே.கே.நகர் மற்றும் வேளச்சேரியின் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கிறது. வீடுகளை சூழ்ந்திருக்கும் மழைநீர் குறைந்த பிறகு மின் விநியோகம் சீராகும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 4,000க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 8,000க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் களப் பணியாற்றிக்கொண்டும், தயார் நிலையில் உள்ளது என்றார்.