கனமழையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகள் கனத்திற்கு

tamilnadu-rain
By Nandhini Nov 11, 2021 03:21 AM GMT
Report

சென்னையில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், சென்னை பெருநகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு-

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக வியாசர்பாடி, கணேஷபுரம், அஜாக்ஸ், கொங்கு ரெட்டி, மேட்லி, துரைசாமி, பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம், காக்கான் ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் மழை நீர் தேங்கியுள்ளதால் கேகே நகர் ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர் டாக்டர் சிவசாமி சாலை, ஈவிஆர் சாலை காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை ,செம்பியம் ஜவஹர் நகர் , பேரவள்ளூர் 70 அடி சாலை, புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பட்டாளம் மணிக்கூண்டு, வியாசர்பாடி முல்லை நகர் பாலம் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம் ஆர் எச் சாலை மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து நெற்குன்றம் நோக்கி செல்லும் வழியில் ரெட்டேரி நிரம்பி நீரானது வெஜிடேரியன் வில்லேஜ் ரோடு வழியாக புழல் கால்வாயை அடைவதால், எம் ஆர் எச் சாலையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் மூலம் சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளது. உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒரே பக்கத்தில் வழியாக செல்கின்றது.

குமணன்சாவடி குன்றத்தூர் ரோடு ஒருபுறம் மூடப்பட்டுள்ளது. திருமலைப்பிள்ளை ரோடு காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது . இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாணி மஹால் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்திலிருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கனமழையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகள் கனத்திற்கு | Tamilnadu Rain