கனமழை எதிரொலி - நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி - 2,000 கனஅடி நீர் வெளியேற்றம்

tamilnadu-rain
By Nandhini Nov 11, 2021 03:15 AM GMT
Report

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

செம்பரம்பாக்கம் பகுதியில் 12 CM மழை பதிவாகி இருக்கிறது. கனமழை காரணமாக வினாடிக்கு 5,240 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், நீர்நிலைகள் நீர் நிரப்புவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்னும் நீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏரியின் கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 2,722 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருக்கிறது. 24 அடி நீர்மட்ட உயர்வில் 20.48 அடியை எட்டி இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதாக நீர்வரத்து அதிகரிக்க கூடும். கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,240 கன அடி உள்ளது.

நேற்று மாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து வர துவங்கியது. செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 70 சதவீதம் தான் நீர் இருப்பு உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். 

கனமழை எதிரொலி - நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி - 2,000 கனஅடி நீர் வெளியேற்றம் | Tamilnadu Rain