கடலூர் அருகே கரையைக் கடக்கும் - வானிலை மையம் தகவல்

tamilnadu-rain
By Nandhini Nov 10, 2021 06:50 AM GMT
Report

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலைகொண்டுள்ளது. இதனையடுத்து, மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இந்த வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும். கடலூர் அருகே கரையைக் கடந்தாலும் தெற்கு ஆந்திராவிலிருந்து நாகப்பட்டினம் வரையிலான கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கடலூர் அருகே கரையைக் கடக்கும் - வானிலை மையம் தகவல் | Tamilnadu Rain