அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த 17 மாவட்டங்களில் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது
. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறி இருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கரையை நெருங்க கூடும். இதனால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகை, வேலூர் ,திருச்சி, அரியலூர் உட்பட 17 மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்யும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.