தொடரும் கனமழை - தக்காளி ரூ.100க்கு விற்பனை

tamilnadu-rain
By Nandhini Nov 08, 2021 06:52 AM GMT
Report

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் காய்கறிகளின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி கோயம்பேட்டில் கிலோ தக்காளியின் விலை 65 ரூபாய்க்கும், வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும், அவரைக்காய், பீன்ஸ், பீட்ரூட் ஆகியவை 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், உருளைகிழங்கு 35 ரூபாய்க்கும் விற்பனையானது. அதே சமயம் சில்லறை வணிகத்தில் கிலோ தக்காளியின் விலை 75 ரூபாய்க்கு விற்பனையானது.

ஆனால், சென்னையில் இன்று சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை 90 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி விடுமுறை காரணமாக காய்கறிகள் பறிப்பதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்கவில். மேலும், தொடரும் கனமழை காரணமாகவும் காய்கறி வரத்து குறைந்துள்ளதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

தொடரும் கனமழை - தக்காளி ரூ.100க்கு விற்பனை | Tamilnadu Rain