கனமழை எதிரொலி - மதுரைக்கு விரைந்து சென்றடைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு

tamilnadu-rain
By Nandhini Nov 08, 2021 05:38 AM GMT
Report

மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழு மதுரைக்கு சென்றடைந்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும், மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு மதுரை வந்தடைந்திருக்கிறது.

தென் மாவட்டங்களில் மழை ஏற்பட்டால் உதவுவதற்கு விரைந்து செல்லும் வகையில் 44 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் முகாமிட்டிருக்கிறார்கள். 

கனமழை எதிரொலி - மதுரைக்கு விரைந்து சென்றடைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு | Tamilnadu Rain