24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வட தமிழகத்தை அதிகம் தாக்கும்
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் வட தமிழகத்தை கனமழை தாக்க உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு -
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் , புதுக்கோட்டை ,ராமநாதபுரம், மதுரை, தேனி ,திண்டுக்கல், திருப்பூர், கரூர் ,திருச்சி ,நீலகிரி, கோயம்புத்தூர் , கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து நவம்பர் 11ம் தேதி தமிழகம் அருகே வரும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூர் பகுதியில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
செய்யூர் ,மதுராந்தகம், சோழவரத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தண்டையார்பேட்டை 10, அயனாவரம் , கும்மிடிபூண்டி, அம்பத்தூர் செங்குன்றத்தில் தலா 9 சென்டிமீட்டர் மழையும், தாம்பரம், கோவை தெற்கு ,ஆலங்காயம் ,மரக்காணம் பகுதியில் தலா 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.