சென்னை உள்ளிட்ட இந்த 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - மக்களே அலர்ட்

tamilnadu-rain
By Nandhini Nov 07, 2021 11:06 AM GMT
Report

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக அதிகமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கானமழை முதல் அதி கனமழையும் மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய உள்ளது. நாளை சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் .ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.