2015ம் ஆண்டுக்கு பின்... இன்று சென்னையை புரட்டிபோட்ட கனமழை - வெதர்மேன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

tamilnadu-rain
By Nandhini Nov 07, 2021 04:59 AM GMT
Report

சென்னையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வட சென்னையில் கனமழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வந்தது. தீபாவளி பண்டிகை முதல் சென்னையில் கனமழை தீவிரமடைந்திருக்கிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் படி, நேற்று இரவு முதல் விடிய விடிய சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

பூண்டி, செம்பரம்பாக்கம், மற்றும் சூழல் ஏரிகளில் இன்று நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து தீவு போல காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று அதிக அளவு மழை பதிவாகி இருப்பதாக தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2015ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் 294 மி.மீ மழை பதிவானது. 2016ல் 150 மி.மீ, 2017- 183 மி.மீ, 2018 - 150 மி.மீ, 2020- 162 மி.மீ மழை பதிவானதாகவும் இன்று காலை 7.30 மணி நிலவரப்படி 207 மி.மீ மழை பதிவாகியிருப்பதாகவும் மயிலாப்பூரில் 226 மி.மீ, அம்பத்தூரில் 205 மி.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் சிவப்பு சம்பவம் இன்று நடந்துள்ளதாகவும் வடக்கு மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் கனமழை தொடரும் என்று பதிவிட்டுள்ளார். 

2015ம் ஆண்டுக்கு பின்... இன்று சென்னையை புரட்டிபோட்ட கனமழை - வெதர்மேன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Tamilnadu Rain