விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை - இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ‘ புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். இதனால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நேற்று முதல் தொடர் கனமழை காரணமாக நெல்லை, விழுப்புரம் ,வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று ஒரு நாள் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகாலை முதலே விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மெரினா கடற்கரை, சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.