‘யாஸ் புயல்’ - நாளை முதல் 29ம் தேதி வரை 22 சிறப்பு ரயில்கள் ரத்து!
வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் ‘யாஸ்’ புயல் உருவாகி உள்ளது. 'யாஸ்' புயலை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறு தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் தீவுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த புயல் வடமேற்கு நோக்கி நகர உள்ளது. வரும் 26-ம் தேதி ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அனைத்து விதமான மருத்துவ முன்னேற்பாடுகளை செய்யுமாறு தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் தீவுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
இதனால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் தீவுகளில் அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமாறும் அத்தியாவசிய மருந்துகள் வசதிகளை போதிய அளவில் வைத்திருப்பதை உறுதி செய்யுமாறும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘யாஸ்’ புயல் காரணமாக, நாகர்கோவில் – ஹவுரா, திருச்சி- ஹவுரா, சென்ட்ரல்- புவனேஸ்வர் உள்ளிட்ட 22 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 29ம் தேதி வரை 22 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.