தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்குள் கொட்டப்போகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்குள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை இன்று பெய்யும்.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்குள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.