போலீஸ் கிடுக்கிப்பிடியில் எம்.ஆர் விஜயபாஸ்கர் - 2-வது நாளாக தொடரும் விசாரணை

tamilnadu-raidu-vijayabaskar-house
By Nandhini Oct 26, 2021 07:16 AM GMT
Report

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நேற்று 8 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இன்று மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் எம்.ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து, கடந்த ஜூலை 22ம் தேதி அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையில், கணக்கில் வராத 25 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை கைப்பற்றியதாக தகவல் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் சொத்து ஆவணங்கள், பணப்பரிவர்த்தனை ஆவணங்கள் ஆகியவை அனைத்தும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்துக்களை சேர்த்திருப்பதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.

உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி விஜயபாஸ்கர் நேரில் ஆஜராவதலிருந்து விலக்குக் கோரி மனு தாக்கல் செய்தார். இருந்தாலும், 25ம் தேதி ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து, நேற்று சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் அவரிடம் தொடர் விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், 2-வது நாளாக இன்று மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   

போலீஸ் கிடுக்கிப்பிடியில் எம்.ஆர் விஜயபாஸ்கர் - 2-வது நாளாக தொடரும் விசாரணை | Tamilnadu Raidu Vijayabaskar House