முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு - விஜயபாஸ்கர் மற்றும் மனைவி மீது வழக்குப்பதிவு

tamilnadu-raidu-vijayabaskar-house
By Nandhini Oct 18, 2021 04:11 AM GMT
Report

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் விஜயபாஸ்கர் மாமனார், தங்கை, தம்பி உள்ளிட்ட உறவினர்களின் வீடுகளிலும் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும், சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், 4-வதாக விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜயபாஸ்கர் சொத்து மதிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 டிப்பர் லாரிகள் 10 கலவை இயந்திரங்கள் 1 ஜேசிபி மதிப்பு: ₹6,58,78,466

BMW Car: மதிப்பு ₹53,33,136 85.12

சவரண் நகை: மதிப்பு ₹40,58,975

விவசாய நிலங்கள்: மதிப்பு ₹3,99,05,400

சென்னை வீடு: மதிப்பு ₹14,57,65,000

பல நிறுவன பங்குகள்: மதிப்பு ₹28,69,73,136

அரசு பதவியை தவறாக பயன்படுத்தி அறக்கடளை தொடங்கி 14 கல்வி நிறுவனங்களை விஜயபாஸ்கர் நடத்தி வருவதுடன், அவர் மனைவி மற்றும் மகள்கள் மீது ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகி இருக்கிறது. இதனால் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு - விஜயபாஸ்கர் மற்றும் மனைவி மீது வழக்குப்பதிவு | Tamilnadu Raidu Vijayabaskar House