அடுத்து அதிரடி - முன்னாள் அமைச்சர் தங்கமணி மருமகனுக்கு சொந்தமான அரிசி ஆலையில் ரெய்டு
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, மனைவி, மகன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 2016 முதல் 2020 மார்ச் வரை ரூ. 4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை, நாமக்கல், கோவை உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திர மாநிலத்திலிருந்து 2 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், தங்கமணியின் மருமகன் தினேஷ்குமாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.