இளங்கோவன் வீட்டில் அதிரடி ரெய்டு - இளங்கோவன், மகன் மீது வழக்குப்பதிவு
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவர், ஜெயலலிதா பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளர் என பல முக்கிய பொறுப்புகள் வகிக்கும் இவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர்.
இளங்கோவனுக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனம் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இவர் பணமதிப்பிழப்பின் போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்திருக்கிறது. அத்துடன் சட்டமன்ற தேர்தலின்போது சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்தார்.
இந்நிலையில் தேர்தலின் போது ஆயிரம் கோடி ரூபாய் இதன் மூலம் செலவு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 2014 முதல் 2020ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ. 3.75 கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன், அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துள்ளனர்.