தனி விமானம் மூலம் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் - மதுரையில் நாளை தேர்தல் பிரச்சாரம்
மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்ட பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய கட்சித்தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
நாளை காலை 10:30 மணி அளவில் துவங்கும் இந்த கூட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் 36 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க இன்று இரவு தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் வரும் மோடி, காரில் பயணித்து பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். நாளை காலை அங்கிருந்து காரில் புறப்பட்டு பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.