45 சவரன் நகையை ஒப்படைத்த பத்மாவுக்கு சிறப்பான கௌரவம்
சென்னையில் சாலையில் கிடந்த 45 சவரன் நகைகளை, போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை கௌரவிக்க தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்
சமீபத்தில் சென்னை தி.நகரில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளர் பத்மா, சாலையில் தங்க நகைகளுடன் கிடந்த பையை கண்டுள்ளார்.

அதனை பொறுப்பாக உரியவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்த அவர், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து பரமேஷ் (46) என்ற நபருடையதுதான் அந்த நகை என தெரிய வந்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த பணியாளரான பத்மாவின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பாராட்டுக்கள்
இதன்மூலம் தூய்மைப் பணியாளர் பத்மாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில், அவரை கௌரவிக்க புகைப்படத்துடன் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அவரின் பெயரில் அஞ்சல் வங்கியில் பிரீமியம் கணக்கையும் தொடங்கி தமிழக அஞ்சல் துறையின் மத்திய கோட்டம் கௌரவித்துள்ளது.
அத்துடன் ரூ.15 லட்சத்திற்கான விபத்து காப்பீடு மற்றும் அதற்கான கணக்கு புத்தகத்தையும் பத்மா பெற்றார்.
