21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு - எப்போ கிடைக்குன்னு தெரியுமா? இதோ

tamilnadu-pongal-gift
By Nandhini Jan 02, 2022 11:06 AM GMT
Report

பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை நாளை மறுநாள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதில் முழு கரும்புடன் சேர்த்து பச்சரிசி, வெல்லம் ,முந்திரி ,திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் ,கடுகு, சீரகம், புளி, மிளகு, கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு, ரவை ,கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகை பொருட்களும் அடங்கிய துணிப்பை ஒன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பத்திற்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை ஜனவரி 4ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பினை 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ. 505 செலவில் வழங்க மொத்தம் ஆயிரத்து 88 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.