அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான சூப்பர் பரிசுகள் - அமைச்சர் மூர்த்தி தகவல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான சிறப்பு பரிசுகள் என்ன என்பது தொடர்பான தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருக்கிறார். மிகவும் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெறக்கூடிய காளை மற்றும் போட்டியாளர்களுக்கான சிறப்பு பரிசுகள் என்ன என்பது குறித்து வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
அதன் படி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றும், அவிழ்த்து விடப்பட கூடிய அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்க காசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக சிறந்த மாடுபிடி வீரருக்கு பரிசாக கார் வழங்கப்படுவதுடன், மாடுகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு தலா ஒரு தங்கக் காசும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.