அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா - மெரினாவில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு

tamilnadu-politics-samugam-police
By Nandhini Oct 16, 2021 03:15 AM GMT
Report

அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்கள் நினைவிடத்தில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

அதிமுக கட்சி தொடங்கப்பட்டு நாளையுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இதனையடுத்து, இந்த ஆண்டு பொன்விழா ஆண்டாக அதிமுகவினரால் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அதிமுக தலைமை செய்து வருகிறது. அதிமுக கொடி கம்பங்கள் உள்ள இடத்தில் அக்கட்சியின் கொடியை ஏற்றுவதுடன், இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட வேண்டும்

என்று ஓபிஎஸ் மற்றம் இபிஎஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த இருக்கிறார்கள். இதனால் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் சசிகலா இன்று அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த இருக்கிறார். இதனால், இன்று மற்றும் நாளை தலைவர்கள் நினைவிடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா - மெரினாவில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு | Tamilnadu Politics Samugam Police