மதிமுக கழக செயலாளராக துரை வைகோ நியமனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மதிமுக கழக செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார்.
சென்னை தலைமை அலுவலகத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது.
அதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதிமுகவில் தன்னுடைய மகனை கட்சியில் இணைத்து பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வைகோ முடிவு எடுத்துள்ளதாகவும் இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில், ரகசிய வாக்கெடுப்பில் 106 வாக்குகளில் 104 வாக்குகள் துரை வைகோவுக்கு கிடைத்திருக்கின்றன.
இதனையடுத்து, மதிமுக கழக செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, மதிமுக தலைமைக் கழக செயலாளராக பொறுப்பு ஏற்ற பின்னர் அக்.25ம் தேதி பெரியார், அண்ணா நினைவிடத்தில் துரை வைகோ மரியாதை செலுத்த இருக்கிறார். அதன் பிறகு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.